25.9 C
Jaffna
January 3, 2025
Pagetamil
சினிமா

கனடாவில் நடிகை ரம்பாவின் கார் விபத்து: மகள் வைத்தியசாலையில்!

கனடாவில் நடிகை ரம்பாவின் கார் விபத்தில் சிக்கியது.

சமீபத்தில் தனது குழந்தைகளை பாடசாலையில் இருந்து அழைத்துக்கொண்டு வீடு திரும்பிய நடிகை ரம்பா கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அனைவரும் சிறு காயங்களுடன் தப்பிய போதிலும், அவரது இளைய மகள் சாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரம்பா இதைப் பற்றி சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு, தனது மகளுக்காக பிரார்த்தனை செய்யும்படி தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மற்றொரு கார் மோதியதால் சேதமடைந்த தனது காரின் புகைப்படத்தையும் ரம்பா பதிவிட்டுள்ளார்.

யீடியில் பிறந்த விஜயலட்சுமி, ரம்பா என்ற பெயரில் சினிமாவில் நுழைந்து 90களில் இந்திய சினிமாவில் புகழ்பெற்று விளங்கினார், ரஜினிகாந்த், அஜித், விஜய், சல்மான் கான், சிரஞ்சீவி மற்றும் மம்முட்டி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்த பின்னர் 2010 இல் நடிப்பதை விட்டுவிட்டு டொராண்டோவுக்குச் சென்றார். அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

Leave a Comment