கோயிலில் படைக்கப்பட்ட 3 மாம்பழங்களும், ஒரு மாலையும் ரூ.1 மில்லியனிற்கு ஏலம் போனது: வவுனியாவில் சம்பவம்!

Date:

வவுனியாவில் நேற்றையதினம் ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழாவின் போது இறைவனுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும் , ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்ட போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவனின் பெயரில் பெற்றோர் அவற்றை ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் எடுத்துள்ளார்.

நேற்றைய தினம் (21) இடம்பெற்ற ஏல விற்பனையில் இந்த மாம்பழங்களையும், மாலையையும் குறித்த மாணவனின் பெயரில் பெற்றோர் பெற்று கொண்டமை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

கிராமப்புற ஆலயம் ஒன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த ஏலத்தொகை குறித்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்