மன்மதராசாவுக்கு விளக்கமறியல்

Date:

இளம் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொல்கஹாவெல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை, நவம்பர் 5-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனக்குச் சொந்தமான பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த 20 வயதுடைய பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கிடைத்த புகாரின் பேரில், பொத்துஹெர காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்தனர்.

சந்தேக நபர் பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான் உதும்பரா தசநாயக்க, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்தச் சந்தேக நபர், 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொல்கஹாவெல பிரதேச சபையின் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

இது குறித்து பொத்துஹெர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...

2 நாளில் ஹோர்முஸ் நீரிணையை திறக்க தயார்!

ஈரான் தனது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை இரண்டு நாட்களுக்குள்...

யாழில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையை நடை முறைப்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்