கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் பூட்டுமாறு நீதிமன்றம் உத்தரவு–

Date:

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து  1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா  தண்டப்பணமாக செலுத்துமாறும் 2 சிறு;றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் தற்காலிகமாக  பூட்டு மாறு ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டு கட்டளை பிறப்பித்தார்

குறித்த சிற்றுண்டிசாலைகளை செங்கலடி சுகாதார அதிகாரிகள் பணிமனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சென்று பரிசோதனை நடவடிக்கையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு பலமுறை அறிவித்தல் வழங்கப்பட்டது.

இந்த சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் ஏறாவூர் நீதவான்  நீதிமன்றத்தில்  8 வழக்குகள் தாக்கல் செய்தனர்

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை திறந்த நீதிமன்றில் நீதவான் குறித்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட போது 3 சிற்றுண்டிசாலைகளையும் ஒலு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறும் 2 சிறு;றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் தற்காலிகமாக  பூட்டி சுகாதர பரிசோதகர்கள் சிபார்சு செய்த திருத்த வேலைகளை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டு கட்டளை பிறப்பித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையில் 3 எண்ணெய் கப்பல்கள் எரிகின்றன: ஈரான் புரட்சிகர காவல்படை

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் செல்லும்போது கண்ணிவெடிகளில் மோதியதில்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ் வாசி பிணையில் விடுதலை!

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து...

ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்