அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு: பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யிடம் அழைப்பிதழ் வழங்கினார் கலாநிதி மாறன்

Date:

இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தர், தொழில​திபர் காவ்யா கலாநிதி மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்​சிக்கு வரு​மாறு, பிரதமர் நரேந்​திர மோடி, தமிழக முதல்​வர் விஜய்க்கு நேரில் அழைப்​பிதழ் வழங்​கப்​பட்​டுள்​ளது.

சன் குழும தலை​வர் கலாநிதி மாறனின் மகளும் ஹைத​ரா​பாத் சன்​ரைசர்ஸ் கிரிக்​கெட் அணி​யின் நிர்​வாக பொறுப்​பாள​ரு​மான காவ்யா கலாநிதி மாறனுக்​கும் இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தருக்​கும் திரு​மணம் நிச்​ச​யிக்​கப்​பட்​டுள்​ளது. இவர்​கள் திரு​மணம் கிரீஸ் நாட்​டில் நவ. 11-ம் தேதி நடை​பெற இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இந்த திரு​மணத்​தில் முன்​னணி திரைபிரபலங்​கள் மற்​றும் இரு குடும்​பத்​தா​ரின் நெருங்​கிய உறவினர்​கள், நண்​பர்​கள் மட்​டும் கலந்​து​கொள்​கின்​றனர். இவர்​களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்​னை​யில் நவம்பர் 21-ம் தேதி நடை​பெற இருக்​கிறது.

இதற்​காக பிரபலங்​களைச் சந்​தித்து திருமண வரவேற்பு அழைப்​பிதழை சன் குழு​மத் தலை​வர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் வழங்கி வரு​கின்​றனர். தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டியை சந்​தித்து நேற்று முன் தினம் அழைப்​பிதழை வழங்​கினர்.

இந்​நிலை​யில் பிரதமர் நரேந்​திர மோடியை டெல்​லி​யில் சந்​தித்த, கலாநிதி மாறன் திருமண வரவேற்​புக்​கான அழைப்​பிதழை வழங்​கி​னார். காவேரி கலாநிதி மாறன், அனிருத்​தின் தந்தை ரவிச்​சந்​தர், அவரது மனைவி லட்​சுமி ஆகியோர் உடனிருந்​தனர். இதே போல் சென்​னை​யில் நேற்று முன்தினம் தமிழக முதல்​வர் விஜய்யை சந்​தித்​தும் திருமண வரவேற்​புக்​கான அழைப்​பிதழை கலாநிதி மாறன் வழங்​கி​னார். காவேரி கலாநிதி மாறன், அனிருத் ஆகியோர் உடன் இருந்​தனர். அவர்​களுக்​கு முதல்​வர்​ விஜய்​ வாழ்த்​து தெரிவித்​தார்​.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்