ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிரான தடைகளை நீக்கிய ட்ரம்ப்

Date:

ரஷ்யா மீதான தடைகள் சட்​டத்​தின் கீழ் விதிக்​கப்​பட்​டிருந்த கச்சா எண்​ணெய், எரி​வாயு கொள்​முதல் செய்​யும் நாடு​கள் மீதான தடைகள் மற்​றும் சுங்க வரி​களை ரத்து செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இதனால் இந்​தி​யா, சீனா உள்​ளிட்ட நாடு​களின் பொருட்​கள் மீது விதிக்​கப்​பட​விருந்த 100 சதவீத வரி நீங்​கும்.

உக்​ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு எதி​ராக, ரஷ்​யா​வின் பொருளா​தா​ரத்தை முடக்க அமெரிக்கா பல்​வேறு நடவடிக்​கை​களில் இறங்கி உள்​ளது.

அதன் ஒரு பகு​தி​யாக, ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கும் இந்​தி​யா, சீனா உள்​ளிட்ட நாடு​களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழி​வகுக்​கும் சட்​டத்தை அமெரிக்கா கொண்டு வந்​தது.

அமெரிக்க செனட் சபை​யில் முக்​கிய பங்கு வகித்த மறைந்த செனட்​டர் லிண்ட்சே கிரஹாமின் பெயரில், ‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்​றும் ஈரான் மீதான பொருளா​தா​ரத் தடைகள் சட்​டம் 2026’ என்ற பெயரில் இந்​தச் சட்​டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த மாதம் இந்​தச் சட்​டத்​தில் ட்ரம்ப் கையெழுத்​திட்​டார்.

இந்​தச் சட்​டத்​தின்​படி, ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கும் முக்​கிய நாடு​களான இந்​தி​யா, சீனா, ஸ்லோ​வாக்​கி​யா, ஹங்​கேரி, அஜர்​பைஜான் ஆகிய நாடு​களின் பொருட்​களுக்கு அமெரிக்​கா​வில் 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதி​காரம் வழங்​கப்​பட்​டது.

இந்த வரி விதிப்பு நடவடிக்​கைகள் xக்​டோபர் 18 ஆம் திகதி (நேற்று) முதல் அமலுக்கு வர இருந்​தன. இந்​நிலை​யில், அமெரிக்​கா​வின் தேசிய நலன் கருதி இந்​தச் சட்​டத்​தின் கீழ் விதிக்​கப்பட வேண்​டிய பல்​வேறு பொருளா​தா​ரத் தடைகள், வர்த்​தகக் கட்​டுப்​பாடு​கள் மற்​றும் வரி​களைத் தற்​காலிக​மாக நிறுத்தி வைப்​ப​தாக ஜனாதிபதி ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். ஜனாதிபதி ட்ரம்​பின் இந்த உத்​தர​வால் சீனா, இந்​தியா உள்​ளிட்ட நாடு​களின் பொருட்​களுக்கு வரி விதிக்​கப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்​துள்​ளது.

ரஷ்யா மீதான தடைகளை அமெரிக்கா ரத்து செய்​துள்​ளதை ரஷ்ய ஜனாதிபதியின் தூது​வரும், பொருளா​தார ஆலோ​சகரு​மான கிரில் திமிட்​ரியேவ் வரவேற்​றுள்​ளார். இதுகுறித்து அவர் கூறும்​போது, “ரஷ்யா மீதான தடைகளை நீக்​கு​வதற்கு அமெரிக்க அதிபர் உத்​தர​விட்​டிருப்​பது வரலாற்​றுச் சிறப்​புமிக்க தருண​மாகும்.

தடை விதிக்​கும் சட்​டத்தை நிறுத்தி வைத்​திருப்​பதை நாங்​கள் வரவேற்​கிறோம். தடைகள் விதித்து மோதல் ஏற்​படு​வதற்​குப் பதிலாகப் பேச்​சு​வார்த்தை நடத்​தி, இரு தரப்​புக்​கும் பயனளிக்​கும் வகை​யில் ஒத்​துழைப்​புடன் நடந்து கொள்​வது அவசி​யம். உலகளா​விய நிலைத்​தன்​மைக்கு இரு நாடு​களின் கூட்​டுப் பொறுப்​பும் தேவை” என்​றார்.

spot_imgspot_img

More like this
Related

திரையரங்கில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு

கிரிந்திவெலவில் உள்ள ஒரு திரையரங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல துப்பாக்கிகள், ஆயிரக்கணக்கான...

‘தேனிசை தென்றல்’ தேவா மிகவும் நல்லவர்! – தலைவர்கள் இரங்கல்

தேவாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலைவர்...

‘தேனிசை தென்றல்’ தேவா உடலுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி

பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்