23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

Date:

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-I (அ) இன் கீழ் இந்த ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்படுகிறது. அரச மற்றும் அரச சார்பற்ற துறைகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 2026 மே 24ஆம் திகதி பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட எழுத்துப் பரீட்சையைத் தொடர்ந்து, இன்று கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தகுதிபெற்றவர்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியை எவ்வாறு சரிபார்ப்பது? விண்ணப்பதாரர்கள் தாம் வசிக்கும் மாகாணத்திற்குரிய இணையப் பக்கத்திற்குச் சென்று, தங்களது பரீட்சை மொழிமூலம் மற்றும் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப வெளியிடப்பட்டுள்ள பட்டியலைப் பார்வையிடலாம். அதில் தங்களது பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தகுதியைச் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

முக்கிய அறிவுறுத்தல்கள் பட்டியல்களுடன் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் ஆவணங்களைத் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் கவனமாக வாசிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தத்தமது பல்கலைக்கழகங்களிலிருந்து ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய விண்ணப்பதாரர்கள், 2026 ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு முன்னர் அவற்றைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நேர்முகத் தேர்வு எப்போது? நேர்முகத் தேர்வுகள் 2026 நவம்பர் மாதத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வுக்கான இடம், திகதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட கடிதங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், நேர்முகத் தேர்வு அட்டவணைகள் மற்றும் மேலதிக விபரங்கள் 2026 ஒக்டோபர் மாத இறுதியில் கல்வி அமைச்சின் இணையத்தளம் மற்றும் சம்பந்தப்பட்ட மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுக்கள் அல்லது மாகாணக் கல்வி அமைச்சுகளின் இணையத்தளங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

இந்திய- நேபாள எல்லை காட்டுக்குள் கைதான யாழ்ப்பாணத்தவர்கள்

இந்தியா-நேபாள எல்லையில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், ரஜ்ஜன்வா சோதனைச் சாவடிக்கு அருகில்,...

ஈரான் மீது விரைவில் மற்றொரு தாக்குதல்: ட்ரம்ப் அறிவிப்பு!

போர் எட்டு மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், எரிபொருள் விலை உயர்வு அமெரிக்க...

மன்மதராசாவுக்கு விளக்கமறியல்

இளம் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்