மேல் மாகாண (வடக்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பாக, ஒரு பெண் மற்றும் இரு ஆண்கள் அடங்கிய சந்தேக நபர்களைக் கைது செய்யப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்ட சந்தேக நபர்களின் விவரங்கள் பின்வருமாறு:
ராஜபக்ஷ பத்திரனகே நிமாலி செவ்வந்தி (வயது: 27); முகவரி: ஒபேசேகர பிளேஸ், மவுண்ட் லாவினியா.
பத்தேகம பத்திரனகே விராஜ் நிமந்த (வயது: 31); முகவரி: ஒபேசேகர பிளேஸ், மவுண்ட் லாவினியா.
ராஜபக்ஷ பத்திரனகே தாரிந்து ஜீவந்த (வயது: 22).
குறித்த பெண் மற்றும் ஆண் சந்தேக நபர்கள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் இருப்பின், மேல் மாகாண (வடக்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரை 071-8592167 என்ற எண்ணிலோ அல்லது அப்பிரிவின் பொறுப்பதிகாரியை 071-8596066 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.




