500 நாட்களுக்கும் மேலாக தொடரும் மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் – தீர்வின்றி நடுத்தெருவில் விடப்பட்டதாக குற்றச்சாட்டு

Date:

மயிலத்தமடு  மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் 1500 நாட்களுக்கு மேலாக பல்வேறு வகையான வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்து வந்த பண்ணையாளர்களது உரிமை போராட்டத்தை பல்வேறு விஷமிகளாலும் சில சுயநலப் போக்காளர்களாலும் கையாளப்பட்டு, அவர்களது நியாயமான கோரிக்கைகள் மலினப்படுத்தப்பட்ட நிலையில், இன்று எந்தவிதமான தீர்வுமின்றி நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எந்தவொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ‘திபுலபொத்தானை’ என்ற கிராமம் இல்லை. ஆனால், தற்போது பெரியமாதவனைப் பகுதி ‘திபுலபொத்தானை’ என அழைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

பல நூற்றாண்டுகளாக மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மாதவனை மயிலத்தமடு பகுதிகள், இன்று சேனைப் பயிர்ச்செய்கைக்காக ஆக்கிரமிப் பாளர்களால் ஆகிரமிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றதுடன் அங்கு  மேச்சலில் ஈடுபடும் மாடுகள் மீது துப்பாக்கி கூடு நடாத்தி மாடுகளை அங்கு மேயவிடாது அச்சுறுத்தில் ஏற்படுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் ‘நல்லிணக்கம்’ என்ற பெயரில் இருதரப்பினரையும் ஒரே மேய்ச்சல் தரையைப் பயன்படுத்த அனுமதிப்பது, உண்மையில் பண்ணையாளர்களை அப்பகுதியிலிருந்து படிப்படியாகவும் முழுமையாகவும் வெளியேற்றுவதற்கான ஒரு திட்டமாக அமையக்கூடும். எனவே இந்நிலை தொடருமானால், இன்னும் சில வருடங்களில் கால்நடை வளம் முற்றாக அழிந்து போகக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை பண்ணையாளர்களின் பிரச்சினைகளைப் பயன்படுத்தி தமது சுயநல நோக்கங்களுக்காக செயற்பட்ட சில புல்லுருவிகளின் செயல்களுக்கு, அவர்களது குடும்பங்களின் பாவங்களும் சும்மா விடாது.

எனவே, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும், கால்நடை வளத்தையும் பாதுகாப்பதற்கான நிரந்தரமானதும் நியாயமானதுமான தீர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டுaம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளத

spot_imgspot_img

More like this
Related

கல்முனையில் “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின்...

கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம்...

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்