கல்முனையில் “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பு

Date:

முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளைகளை நசுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கல்முனையில் பல்வேறு துறை சார்ந்த பிரதிநிதிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்பியுள்ளனர்.

“எமக்கான சமூக நீதி எழட்டும்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கல்முனை மயோன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஆர். அமீர் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. பஷீர், முன்னாள் உறுப்பினர்களான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், விரிவுரையாளர் ஏ. கலீலுர்ரஹ்மான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும் அரசியல் செயற்பாட்டாளருமான யூ.எல். தௌபீக், எம்.எம். முஸ்தபா, பி.டி. ஜமால், மௌலவி ஜமால்டீன், வர்த்தகர் சங்கப் பிரதிநிதி ஜௌபர் ராஜா, ஆழ்கடல்  மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

ஹிஜாப் சர்ச்சை மற்றும் ஹரீஸின் தலையீடு:

இங்கு கருத்துத் தெரிவித்த ஏ.ஆர். அமீர், கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாதிய உதவியாளர்களின் ஆடை (ஹிஜாப்) விவகாரம் தொடர்பான சர்ச்சை எழுந்தபோது, முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ் உடனடியாகத் தலையிட்டு வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துத் தற்காலிகத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுத்தார்.

ஆனால், சமூகத்திற்குப் பணிசெய்த அவருக்கு எதிராகவும், குரல் கொடுத்த ஆறு பேருக்கு எதிராகவும் நீதிமன்ற வழக்குகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது அவர்களின் குரல்வளையை நசுக்கும் செயலாகும் எனக் கண்டித்தார்.

தேசிய அரசியலில் முஸ்லிம்களுக்கான அங்கீகாரம்:

நாட்டின் 60 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் தற்போதைய அரசாங்கத்தை நம்பி வாக்களித்தபோதிலும், ஆட்சிக்கு வந்து இரு வருடங்கள் கடந்தும் முஸ்லிம் சமூகம் என்ற அங்கீகாரமோ அல்லது ஒரு முஸ்லிம் அமைச்சரவை அமைச்சுப் பதவியோ வழங்கப்படவில்லை என்ற பாரதூரமான குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார். ஷாஹின் ஆணைக்குழுக்கள் போன்ற முக்கிய ஆணைக்குழுக்களிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கல்முனைக்கான அரசியல் அநீதி:

தேர்தல் வேட்புமனு விவகாரத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் ஒதுக்கப்பட்டமையானது, தனிநபர் ஒருவருக்குச் செய்யப்பட்ட அநீதி என்பதை விட, கல்முனை மண்ணுக்கும் அதன் அரசியல் முகவரிக்கும் செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட வரலாற்றுத் துரோகமாகும் என அமீர் தெரிவித்தார்.

அதேநேரம், அண்மையில் மருதமுனையில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாகக் கைது செய்யப்படும் முஸ்லிம்களுக்காகவும், கல்முனைப் பிராந்தியத்தின் எரியும் பிரச்சினைகளுக்காகவும் முதன்மை பெற்று வழக்காட முன்வர வேண்டும் என்றும் அவர் பகிரங்கக் கோரிக்கை விடுத்தார்.

சமூக உரிமைகளுக்காகவும், சட்ட ரீதியான அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ள ஆறு பேரின் நியாயமான தீர்வுக்காகவும் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்துத் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம்...

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்