அரவிந்த டி சில்வா தம்பதியின் ரூ. 40 மில்லியன் பிணை அரசுடைமை!

Date:

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க சார்பாகப் பிணை நின்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் பிணையாக செலுத்தியிருந்த பணத்தை அரசுடைமையாக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று (30) உத்தரவிட்டார்.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க, தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, பிணையாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, பிணைப் பணத்தில் 20 மில்லியன் ரூபாயை இன்றைய தினமே நீதிமன்றத்தில் வைப்புச் செய்வதாகத் தெரிவித்தார்.

அதற்கு அனுமதியளித்த நீதவான், எஞ்சிய பிணைத் தொகையை வைப்புச் செய்வதற்கு எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

சந்தேகநபர் பிரியங்கா நியோமாலி தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாது தலைமறைவாக உள்ளதால், அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் சர்வதேச பொலிஸார் (Interpol) ஊடாக அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிணையாளர்கள் சார்பில் மன்றில் கருத்தை முன்வைத்த சட்டத்தரணி, “சந்தேகநபரின் கணவர் உயிரை மாய்த்துக் கொண்டமை மற்றும் தமது உயிருக்கு ஏற்பட்டுள்ள தீவிர அச்சுறுத்தல் காரணமாக அவர் நாடு திரும்புவதற்கு அச்சப்படுகிறார்.

தற்போதைய சூழலில் சந்தேகநபர் பிணையாளர்களின் கட்டுப்பாட்டில் இல்லை,” எனக் கூறி, பிணையாளர்களுக்குச் சலுகை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும், சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையலி வெளிநாடு சென்றதுடன், தனது கணவர் கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முன்னரே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்டிய நீதவான், பிணையாளர்களுக்குச் சலுகை வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தார்.

இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷவுக்கும் ஏற்கனவே சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற நடவடிக்கைகளின்போது தெரிவிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய...

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்