பொது வீதியோர மீன் விற்பனைக்கு இறுதி எச்சரிக்கை

Date:

பொது வீதியோரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதார அதிகாரிகளால் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது வீதியோரங்களில் மீன் விற்பனை செய்யப்படுவது குறித்து இன்று (19) அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து இக் கடுமையான எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே சில வழக்குகள் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியோரங்களில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு இன்று இறுதி சந்தர்ப்பமாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களில் சட்டத்தை மீறிப் பொது வீதியோரங்களில் மீன் விற்பனையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எதிராகத் தயவுதாட்சணியமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து மீன் வியாபாரிகளும் நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் சுகாதார விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றி, பொதுச் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்