நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது—மட்டு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கண்டனம்

Date:

நாடாளுமன்ற உறுப்பினரான இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை கைது செய்தது ஜனநாயகத்துக்கு எதிரானது செயல் என்பதுடன் இளைய சமுதாயத்தை அரசியலில் வரவிடாமல் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு மாவட்ட அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ வை கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (6) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இந்த நாடு ஆங்கிலேயரிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றாலும் நாம் இன்று சர்வாதிகாரத்துக்கு அடிமையாகவே இருந்து வந்தோம் இந்த நிலையில் நாடு அழிவு பாதையில் செல்லும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்சவினால் நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் 2009 ம் ஆண்டு கிடைத்தது.

அவர்  வீதிகள், பாலங்கள், பாடசாலைகள் என பல அபிவிருத்திகளை செய்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு சென்றவர் அவ்வாறான அவரது மகன் நாமல் ராஜபக்ஷ எதுவித உண்மை காரணங்களும் இல்லாமல் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது ஜனநாயகத்துக்கு எதிரானது எமது இளைய சமுதாயத்தை வரவிடாமல் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

நாமல் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கட்டும். மக்களின் மனங்களை அறியாத அரசாங்கம் இன்று தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றது.

அன்று பொருட்களின் விலை குறைப்பதாக கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முந்தைய ஆட்சி காலங்களை விட பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது இதனால் மக்கள் வைத்தியசாலைகளிலும் சிறைச்சாலைகளிலும் நிறைந்து வழிகின்றனா.;

இன்று நாடே போர்களமாக மாறியுள்ளது டன் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களே வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்துகின்றனர். எனவே இந்த தவறான செயலை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.

எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை உடனடியாக விடுதலை செய்யும்படி மாவட்ட மக்களின் பிரதிநிதியாக அரசிடம் கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

spot_imgspot_img

More like this
Related

காதலியை கொடூரமாக கொலை செய்த பின் உயிரை மாய்த்த காதலன்!

வத்தளை, பல்லியவத்தை, தன் லங்கா வீதியில் உள்ள ஒரு வீட்டில், பதினெட்டு...

இலங்கையில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்