இலங்கையில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

Date:

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் (06) நண்பகல் 12:08 மணிக்கு பெந்தோட்டை, தினியாவல, இத்தக்கந்த, உடவலவை மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்