சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சாதனை : 4 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல்

Date:

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயம், 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று கல்விச் சாதனை படைத்துள்ளது. இவ்வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 4 மாணவர்கள் 133 எனும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சிறப்பாகச் சித்தியடைந்துள்ளனர்.

இதன்படி, எஸ்.எஸ்.எச்.தஹி அஹமட் 141 மதிப்பெண்களைப் பெற்று பாடசாலையில் முதலிடத்தையும், ஏ.எம். சிபாட் 138 மதிப்பெண்களையும், ஏ.எஸ். பாத்திமா ஸஹ்ரா 134 மதிப்பெண்களையும், ஆர்.எப். ஸைனப் சாரா 133 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். மேலும், இப்பரீட்சையில் 42 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

மாணவர்களின் இந்தச் சிறப்பான பெறுபேற்றுக்காக மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான எஸ்.எல். நவாஹிர், மற்றும் ஏ.பி.எம். சிராஜுதீன் ஆகியோருக்கும் பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பான கல்விச் சாதனை பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக அமைந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்