கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

Date:

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்

உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் குறித்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய புஷ்பராசா சமர்நிலவன் என்ற இளைஞனே குறித்த விபத்தில் பரிதாபகரமான உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்