நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

Date:

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (27) மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர்.

கல்குடா கருங்காலிச்சோலை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய கமலேஸ்வரன் சங்கீதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த இளைஞன் சம்பவ தினமான நேற்று மாலை வீட்டில் உறங்குவதற்கு சென்ற நிலையில் அவரது கையடக்க தொலைபேசியை மின்சாரத்தின் ஊடாக சார்ஜ் செய்து கொண்டு கையடக்க தொலைபேசியை அவரது நெஞ்சில் இருதயம் இருக்கும் பகுதியில் வைத்து கொண்ட நிலையில் உறங்கி கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கையடக்க தொலைபேசியின் பற்றி சூடாகி வெடித்ததையடுத்து படுகாயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்