West Indies-க்கு பதிலடி கொடுத்த Sri Lanka; Shanaka, Mishara Heroics!

Date:

இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸை 37 ஓட்டங்களால் வீழ்த்தி, இரு போட்டிகள் கொண்ட T20 தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணித்தலைவர் ஷாய் ஹோப் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதனை முழுமையாகப் பயன்படுத்திய இலங்கை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் கமில் மிஷாரா சிறப்பாக விளையாடி 60 ஓட்டங்களைப் பெற்றார். அதேவேளை, தசுன் ஷனகா வெறும் 24 பந்துகளில் 58 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஷமார் ஜோசப் 3 விக்கெட்டுகளையும், மேத்யூ போர்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

195 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தேவையான ஓட்ட வேகத்தைத் தக்கவைக்க முடியாமல் 18.1 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணிக்காக ரோவ்மன் பவல் 43 ஓட்டங்களையும், ஷிம்ரோன் ஹெட்மையர் 36 ஓட்டங்களையும் பெற்ற போதிலும், இலங்கையின் இலக்கை எட்ட அது போதுமானதாக அமையவில்லை.

இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, வெஸ்ட் இண்டீஸ் துடுப்பாட்ட வரிசையை சிதறடித்தனர். இவர்களின் சிறப்பான பந்துவீச்சே இலங்கையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டம் சமன்: வரலாற்றில் முதன்முறையாக புள்ளியை பெற்றது கனடா

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று டொராண்​டா​வில் உள்ள பிஎம்ஓ...

சிவாஜிலிங்கத்திற்கு சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை முடிந்தது!

வல்வட்டித்துறை நகரசபை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து...

பைத்தியக்காரத்தனத்தின் உச்சமாக அமைந்த அர்ச்சுனாவின் பேச்சு!

முன்னர் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வந்த விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் புலம்பெயர் சமூகம்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்