‘உருக்குலைந்த சடலமாக மதகின் கீழ் வீசிவிடுவார்கள்’… சுரேஷ் சாலே மிரட்டினார்: வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டவர் அதிர்ச்சித் தகவல்!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சந்தேகநபராக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தும் மற்றொரு சாட்சியமாக கடத்தப்பட்ட தமிழர் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

2008 இல் கொழும்பில் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்ட கனகசபை தேவதாசன், நீண்டகால சிறைவாசத்தின் பின்னர் சில ஆண்டுகளின் முன்னர் விடுதலையாகியிருந்தார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இட்ட பதிவு வருமாறு-

இலங்கையில் இன்று அதிகம் பேசப்படும் நபர்களுள் ஒருவராக அரச புலனாய்வுச் சேவை ( SIS ) இன் முன்னாள் பணிப்பாளர் துவான் சுரேஷ் சாலே உள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இவர் மீதும் பாய்ந்துள்ளது. உள்ளே சித்திரவதை செய்கின்றனர் என்று கூறி அதற்கெதிராக உண்ணாவிரதம் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். அவர் நல்லவர் & அப்பாவி என்று சிலர் முழங்கியபடி கொழும்பில் போராட்டம் செய்து அவரை விடுதலை செய்யுமாறும் கோருகின்றனர்.

யாருக்காவது உதவக்கூடும் என்பதால் இத்தருணத்தில் என் அனுபவம் ஒன்றைப் பொதுவில் பகிர்கிறேன்.

2008 ஜூன் மாதம் 14 இல் கொழும்பில் வெள்ளைவான் மூலம் நான் கடத்தப்பட்டு இரகசிய இடமொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டேன். நான்கு நாள் கழித்து ஜூன் 18 இல் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஒருவர் என்னை வந்து சந்தித்தார்.
இரத்த வாடை கலந்து துர்நாற்றம் வீசும் உடையுடன் தரையில் இருந்த என்னை கதிரையில் இருக்கச் சொன்னார். வன்முறையற்ற வார்த்தைகளுடன் மிகவும் மென்மையாக ஒரு மணிநேரம் என்னுடன் உரையாடினார். இனவாதமற்ற இலங்கை பற்றியும் பேசினார். உரையாடலின் இறுதிக் கட்டம் வந்தது.
அவர் சொன்னார்.

” என்னைக் கடத்திய செய்தி தொலைக்காட்சி ஊடகத்தில் வந்துவிட்டது. இனிமேல் என்னைச் சும்மா விட முடியாது. அதனால் தற்கொலை அங்கியுடன் தொடர்பான ஏதேனும் ஒரு சம்பவத்தைக் கூறிக் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தால் உயிருடன் விடமுடியும். இல்லையென்றால் இன்றிரவு அவிசாவளையில் மதகு ஒன்றின் கீழ் உருத்தெரியாத சடலமாக்கி வீசிவிடுவார்கள். நம்மாட்கள் குடிபோதையில் அதற்குத் தயாராகிவிட்டனர். இன்னும் ஒரு மணிநேரம் தருகிறேன். நன்றாக யோசித்து முடிவைச் சொல். ”

அந்த நாள்களில் உருத்தெரியாத சடலங்கள் அவிசாவளையில் வீசப்படுவது அடிக்கடி ஊடகச் செய்தியாக வந்ததை அப்பொழுது நான் அறிந்திருந்தேன்

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்