மரமுந்திரி தோட்டத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

Date:

வாயுத் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வனத்தவில்லு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வனத்தவில்லு, கரதீவு பகுதியில் உள்ள மர முந்திரித் தோட்டத்தில் இன்று (09) அதிகாலை சுமார் 1.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் அதுகோரலகே பிரதீப் சுசந்தா என்ற 38 வயது நபர் உயிரிழந்தார்.

சிலாவம் தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான கரதீவு பகுதியில் உள்ள ஒரு நிலத்தை, மரமுந்திரி அறுவடை செய்வதற்காக கல்பிட்டியவைச் சேர்ந்த ஒருவர் குத்தகைக்கு எடுத்துள்ளார்.

குத்தகைதாரர் மரமுந்திரித் தோட்டத்தைப் பாதுகாக்க காவலர்களை நியமித்திருந்த நிலையில், இன்று (09) அதிகாலையில் மரமுந்திரித் தோட்டத்திற்குள் இரகசியமாக நுழைந்த ஒருவரை காவலர் ஒருவர் சுட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், புத்தளம் ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

வனத்தவில்லு பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...

நெல்லியடி பொதுச்சந்தை மலசலகூடங்களில் சுகாதார சீர்கேடு

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மரக்கறி சந்தையில் காணப்படும் மலசல கூடங்கள் சுகாதார...

ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை!

தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்