கிரிந்திவெல, நரங்கஸ்பிட்டியவில் 2018 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக, நிட்டம்புவவைச் சேர்ந்த 47 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவியல் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் விசாரணையைத் தொடர்ந்து, நிட்டம்புவ பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள ரன்பொக்குனுகம பகுதியில் நேற்று இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுத் தயாரிப்பு பேனா வடிவிலான ஒரு சிறிய துப்பாக்கியும், அதனுடன் ஐந்து தோட்டாக்கள், நான்கு ரி-56 ரகத் தோட்டாக்கள், எட்டு 9மிமீ தோட்டாக்கள் மற்றும் இரண்டு 12-போர் ரகத் தோட்டாக்கள் அடங்கிய வெடிமருந்துகளும் சந்தேக நபர்களிடமிருந்து கண்டெடுக்கப்பட்டன.
இந்த வழக்கில் குற்றவியல் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு மேலதிக விசாரணையைத் தொடர்கிறது.




