600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

Date:

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் வியாபாரத்துக்காக கஞ்சா கடத்தி சென்ற கொக்கடிச்சோலை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த இரு பிரபல வியாபாரிகள் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்று வெள்ளிக்கிழமை (5) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டு தலைமையக பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின ஆலோசனையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி 20637 பொலிஸ் சாஜன் ஜயசிங்க தலைமையிலான ரதன் உட்பட்ட 66928 , 72341, 22295 , 40202 ஆகிய குழுவினர்

சம்பவ தினமான நேற்று இரவு 8.00 மணியளவில் ஆரையம்பதி பகுதியில் உள்ள வீதிகளில் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் இதன்போது வியாபாரத்துக்காக கேரளா கஞ்சாவை எடுத்துக் கொண்டு வந்த இருவரையும் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார் சுற்றிவளைத்து மடக்கிப்பிடித்து கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 600 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் இவரின் தந்தையார் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் அவரிடமிருந்து 50 கிராம் கேரள கஞ்சாவும் காத்தான்குடி 6 பிரிவைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து 550 கிராம் கஞ்சாவை மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்