யாழ் பல்கலை சித்த மருத்துவபீட விரிவுரையாளர் கொலை வழக்கு

Date:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் சாட்சியம்,அவதானக் குறிப்புகள், நீதிமன்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு விரிவுரையாளரின் வீட்டில் குற்றச் சம்பவம் நடைபெற்றமை தெளிவாகுவதுடன் விரிவுரையாளர் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதியாகிறது என நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டது.

குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றபோது நீதிவான் எஸ்.லெனின்குமார் இதனை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தொடர் நடவடிக்கைகளுக்காக வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 16ம் திகதிக்கு திகதியிட்ட நீதிவான், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோரின் விளக்கமறியல் காலத்தை அன்றையதினம் வரை நீடித்து உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டலில் பெனிஸ்லஸ் துஷானும் முதலாவது சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரனும்
இரண்டாவது சந்தேக நபரான சிரேஷ்ட விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணியும் ஆஜராகி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்