விகாரைக்குள் ‘கசமுசா’: மற்றொரு மன்மதராசா சிக்கினார்!

Date:

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த பிக்குவை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை(2) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது விகாரையில் தங்கி இருந்த 5 இளம் பிக்குகில் 3 இளம் பிக்குகள் அண்மையில் தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் அறிந்த ஊர் மக்கள் விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள தயாரான வேளை குறித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் 2 இளம் பிக்குகள் பொலிஸாரினால் வாக்குமூலம் பெறுவதற்காக விகாரையில் இருந்து அழைத்து சென்ற நிலையில் குறித்த சந்தேக நபரான 41 வயது பௌத்த பிக்கு தீகவாவி பிரதேசத்திற்கு தப்பி சென்றிருந்தார்.

பின்னர் மற்றுமொரு பௌத்த பிக்கு சகிதம் 41 வயதுடைய பௌத்த பிக்கு தீகவாபி பகுதியில் இருந்து மத்திய முகாம் பொலிஸாரிடம் சரண் அடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் வாக்குமூலம் வழங்கிய இரு இளம் பிக்குகளில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய இளம் பிக்குவை மத்திய முகாம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதுடன் மருத்துவ பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு சந்தேகத்தில் கைதான 41 வயது சந்தேக நபரான பௌத்த பிக்குவை இன்று(3) அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய மகாம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

– பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையில் 3 எண்ணெய் கப்பல்கள் எரிகின்றன: ஈரான் புரட்சிகர காவல்படை

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் செல்லும்போது கண்ணிவெடிகளில் மோதியதில்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ் வாசி பிணையில் விடுதலை!

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து...

ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்