காத்தான்குடியில் தீவிபத்து

Date:

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு (26) ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் பெருமளவிலான சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீப்பரவல் குறித்துத் தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி நகரசபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், காத்தான்குடி பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர்.

தீயணைப்புப் படையினரின் கடும் போராட்டத்தின் பயனாகத் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பவ இடத்தில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த தீ விபத்து காரணமாகக் குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததுடன், மட்டக்களப்பு – கல்முனை வீதியூடான போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் வாகனங்களை மாற்று வீதிகளின் ஊடாகச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நெருக்கடி கட்டத்தில் நேட்டோவிற்கு வழங்கப்படும் மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள், போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா திட்டம்

நெருக்கடி காலங்களில் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு உதவுவதற்காக வழங்கப்படும் போர் விமானங்கள்,...

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாயில் கைது!

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாசிக், ஆல்டோ தர்மா, மற்றும்...

யாழ் வந்த கார் காட்டுயானையுடன் மோதல்

கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில், கெக்கிராவ-தோணிகலப் பகுதியில் நேற்று முன்தினம் (25) இரவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்