மிளகாய் தோட்டத்தில் விவசாயின் சடலம் மீட்பு!

Date:

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இனம் தெரியாதோரல் வெட்டியும் கொத்தியும் கொலை செய்யப்பட்ட நிலையில் 68 வயதுடைய விவசாயி ஒருவர் மிளகாய் தோட்டம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 4 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டம் ஒன்றில் இன்று காலையில் விவசாயியான சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய காசிநான் ஜெயகாந் என்பவரது தோட்டத்தில் அவரை வெட்டியும் கொத்தியும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள விளாவெட்டுவான் நாவற்குடா பிரதேசத்தில் கடந்த 13ம் திகதி இடம்பெற்ற மரணவீடு ஒன்றில் இரவில் உறவினர் இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது மண்வெட்டி பிடியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய 19 வயது இளைஞனை 14ம் திகதி செவ்வாய்கிழமை கைது செய்ததுடன் சிகிச்சை பெற்று வந்த 35 வயதுடைய தங்கத்துரை ரவீந்திரா நேற்று சனிக்கிழமை (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 17ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி பிரதேசத்தில் மதுபானம் குடிப்பதற்கு ஆயிரம் ரூபா பணம் தர மறுத்த தாயாரை அவருடைய உள்ஆடையை கிழித்து கழுத்தை இறுக்கி தரையில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட 42 வயதுடைய குமாரசாமி வசந்தா என்பவரது சடலம் மீட்கப்பட்டதுடன் தாயை கொலை செய்த குற்றச்சாட்டில் 20 வயதுடைய அவரது மகனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் முதலாம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 7ம் திகதி 16 வயது மகள் சைக்கிள் ஓடியதை கண்ட தந்தையார் அவரை சிறு பிரம்பால் அடித்து கண்டித்ததை கண்ட சகோதரன் தந்தையாரை கம்பு ஒன்றினால் அடித்ததையடுத்த அவர் எதிரே உள்ள வீடு ஒன்றில் புகுந்து மறைந்து கொண்டதையடுத்து அவர் பகுங்கியிருந்த வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு அவர் மீது பொல்லால் அடித்து தாக்கியதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 17ம் திகதி வெள்ளிக்கிழமை 4 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய மாரிமுத்து ரவிச்சந்திரன் உயிரிழந்துள்ளார்.

இதில் தந்தையை தாக்கிய இரண்டாவது மகனான 25 வயதுடைய இளைஞனை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் 19 வயதுடைய 3 வது மகன் கடந்த டித்தா புயல் காலத்தில் காணாமல் போள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

அதேவேளை 17 ம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு மகாஓயா சூரியடி கொன்வல பகதியில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்த நிலையல் அந்த பகுதியைச் சேர்ந்த விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிவரும் முதியன்சலாகே பிரசாத் சதுன் பண்டார என்பவர் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இவ்வறு இடம்பெற்ற கொலை சம்பவ இடங்களுக்கு மட்டக்களப்பு பொலிஸ் தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.ரவிச்சந்திரன் மற்றும் பொலிஸ் சார்ஜன் நா.கிசோர்குமார் மற்றும் அரச சட்ட வைத்திய அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று சடலங்களை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி, சந்திவெளி, ஏறாவூர், வவுணதீவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்