பால் சேகரிக்கும் லொறியிலிருந்து தவறி விழுந்த 13 வயது மாணவி உயிரிழப்பு

Date:

நுவரெலியா, நோர்வூட் பகுதியில் பால் சேகரிக்கும் லொறியிலிருந்து தவறி விழுந்து 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயின்று வந்த விஜயகுமார் ஹர்ஷனி என்ற மாணவியாவார். இவர் நோர்வூட் வென்ச்சர் தோட்டத்தின் 50 ஏக்கர் பகுதியில் வசித்து வந்தவர்.

சம்பவத்தன்று, தனது பாடசாலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கரோல் பாடல் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, பிற்பகல் சுமார் 4 மணியளவில் பால் சேகரிக்கும் லொறியின் பின்புறத்தில் ஏறிப் பயணித்துள்ளார்.

வீட்டுக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லொறியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்