பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சை விடுதி திறந்து வைப்பு!

Date:

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவை மேலும் மேம்படுத்தும் நோக்கில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சை விடுதி, (23) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன், வைத்தியர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சைப் பிரிவின் கட்டிடத்தை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.ஜவாஹிர் மற்றும் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் ஆகியோர் இணைந்து உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
கடந்த காலங்களில் நோயாளர்கள் எதிர்கொண்டுவந்த இடவசதிப் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைத்துள்ளதுடன், நோயாளர் பராமரிப்புச் சேவைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கவும் அமைந்துள்ளது.
இதன் மூலம் பொத்துவில் பிரதேச மக்களுக்கு மாத்திரமன்றி, பொத்துவிலை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கும் தரமான சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்ள பெரிதும் உதவியாக அமைவதுடன், மக்களுக்குத் தரமானதும் வினைத்திறன் மிக்கதுமான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும் அமையும் என வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
spot_imgspot_img

More like this
Related

அரச ஊழியர்களுக்கு 2027 ஜனவரி முதல் மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு!

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 2027 ஜனவரி...

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் திட்டமிட்ட தாக்குதல்கள் – ஐ.நா அதிர்ச்சி அறிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில், மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள்...

சுட்டுக்கொல்லப்பட்டவரின் சடலம் மீட்பு

பூஸா பகுதியின் மலிதுவவில், சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் நேற்று காலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்