வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

Date:

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை மற்றும் நான்கு மகன்களில், காணாமல் போன மூவரில் இருவரின் சடலங்கள் இன்று (15) பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தந்தை மற்றும் அவரது நான்கு மகன்கள் நேற்று (14) பிற்பகல் ஆற்றில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகினர். இதில் தந்தையும் ஒரு மகனும் உயிர் தப்பிய நிலையில், மற்றைய மூன்று மகன்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

அவர்களில் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 35 மற்றும் 34 வயதுடைய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த நான்கு மகன்களும் சித்திரை புத்தாண்டுக்காகத் தமது சொந்த கிராமத்திற்குத் திரும்பியிருந்தனர். அவர்கள் தமது தந்தையுடன் இணைந்து நீராடச் சென்ற போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் ஊர்வலம் – பொலிஸார் ஒத்துழைப்பு

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்