தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

Date:

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த “மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026” கரம் போட்டியின் பரிசளிப்பு விழா கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் அல் ஹாஜ் ஏ.எச்.எம். பௌசி மண்டபத்தில் நடைபெற்றது.

“Unity, Sports & Excellence” என்ற தொனிப்பொருளின் கீழ் 25ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டித் தொடரின் பரிசளிப்பு விழாவில் கொழும்பு மாநகர சபை பிரதி முதல்வர் ஹேமந்த வீரக்கோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் அதிபர் என். ஷனியா டெயின் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

தெமட்டகொட யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் கடந்த 25 ஆண்டுகளாக விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கும் பங்களித்து வருவதுடன், கரம் விளையாட்டை ஊக்குவிக்கும் பல்வேறு போட்டிகளையும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

25ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026 போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் வெற்றியாளர்களை கௌரவிக்கும் வகையில் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டின் ஊடாக ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் சிறந்த திறமைகளை வளர்ப்பதே தமது நோக்கம் என தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள், கரம் விளையாட்டு வீரர்கள், பழைய மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்: அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசரக் கோரிக்கை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில்இ அவர்களுக்கு இலவச...

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உதய தினத்தை முன்னிட்டு, கல்முனை...

நீதி அமைச்சர் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிகழ்வு

'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு ,   (International Day...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்