மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

Date:

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி ஸ்பியர்ஸ் தாமாக முன்வந்து மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வெஞ்சுரா கவுண்டியில் அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக மார்ச் 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மறுநாள் அதிகாலையில் விடுவிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் இறுதி செய்யப்படாத நிலையில் மே 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரிட்னியின் மேலாளர் கேட் ஹட்சன் வெளியிட்ட அறிக்கையில், “இது துரதிர்ஷ்டவசமான மற்றும் மன்னிக்க முடியாத சம்பவம். பிரிட்னி, சட்டத்துக்கு முழுமையாகக் கட்டுப்படுவார். அவரது வாழ்க்கையில் நீண்டகாலமாகத் தேவைப்படும் ஒரு மாற்றத்துக்கு இதுவே தொடக்கமாக அமையும் என்று நம்புகிறோம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மதுபோதையால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தாமாக முன்வந்து ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்ந்துள்ளார். அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக, அவர் குணமடைவதற்காக இம்முடிவை எடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்