யாழில் இரு முதியவர்களின் சடலங்கள் மீட்பு!

Date:

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அல்வாய் பகுதியை சேர்ந்த 78 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் நேற்று (30) தனது வீட்டாருடன் முரண்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறியவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடி சென்றனர்.

இந்நிலையில் இன்று (31) காலை முதியவர் வியாபாரிமூலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸார், முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவர் சுதுமலை பகுதியை சேர்ந்த 75 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துச் செய்யக் கோரி வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினர் போராட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக அனுமதியளிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துச் செய்யுமாறு...

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன் – அநுர ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய டக்ளஸ்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்