யாழ்ப்பாணத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துச் செய்யக் கோரி வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினர் போராட்டம்!

Date:

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக அனுமதியளிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துச் செய்யுமாறு கோரி, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினரால் இன்று (15.10.2026) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில், புதிதாக அனுமதியளிக்கப்பட்ட மதுபானசாலைகளுக்கு எதிராகப் பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன்போது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், மதுவொழிப்புக்கான அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக மதுபானசாலைகளைத் திறப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை ரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியே இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்