யுவதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது!

Date:

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் யுவதி ஒருவரை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 46 வயதுடைய நபர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (27) அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது

குறித்த பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த யுவதி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த திருமணம் முடிக்காத 46 வயதுடைய ஆண் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து குறித்த நபரை சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் அந்த பகுதியில் நீண்ட காலமாக இவ்வாறு பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்