‘மரியான்’ படப்பிடிப்பில் மோசமான அனுபவம் – நடிகை பார்வதி வருத்தம்

Date:

தனுஷின் ‘மரி​யான்’ படப்​பிடிப்​பில் தான் மோச​மான அனுபவத்தைச் சந்​தித்​த​தாக நடிகை பார்வதி தெரிவித்துள்​ளார்.

மலை​யாள நடிகை​யான பார்​வ​தி, தமிழில் வெளி​யான ‘பூ’, ‘மரியான்’, உத்​தம வில்லன்’, ‘தங்​கலான்’ உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்​துள்​ளார். அவர் சமீபத்​தில் அளித்​துள்ள பேட்டியில், தனுஷின் ‘மரி​யான்’ பட ஷூட்​டிங்​கின் போது தன்னை உடை மாற்ற அனுமதிக்க​வில்லை என்று வருத்​தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், “’மரி​யான்’ படத்தின் ஒரு காட்​சி​யில் தண்​ணீரில் முழுவதுமாக நனைந்​த​படி நடித்​தேன். அது கதா​நாயக​னுடன் வரும் காதல் காட்​சி. அப்​போது மாற்று​வதற்கு நான் உடைகள் கொண்டு வரவில்​லை.

என் தேவை​களைக் கவனித்துக்கொள்ள அங்கும் யாரும் இல்​லை. ஒரு கட்டத்தில், உடை மாற்​று​வதற்​காக நான் என் ஓட்​டல் அறைக்குச் செல்ல வேண்​டும் என்று சொல்ல வேண்டியிருந்​தது. அதற்கு அவர்​கள் அனு​ம​திக்​க​வில்​லை.

எனக்கு ‘பீரியட்’ என்​றும், நான் கண்​டிப்​பாகச் செல்ல வேண்​டும் என்றும் சத்​த​மாகச் சொன்​னேன்” என்ற பார்வதி, ’மரி​யான்’ படப்பிடிப்​புத் தளத்​தில், தன்​னைச் சேர்த்து மொத்​தம் 3 பெண்​கள் மட்டுமே பணிபுரிந்ததாகவும் அது தனக்கு கடின​மாக இருந்ததாகவும் தனக்​கு ஆதர​வாக அங்குயாரு​மில்லை என்​றும் தெரிவித்​துள்​ளார்.

2023-ம் ஆண்டு வெளி​யான ‘மரி​யான்’ படத்தை பரத் பாலா இயக்கி இருந்​தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்