ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடிக்கும் ‘இம்மார்ட்டல்’ டீசர் வெளியீடு!

Date:

ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடித்துள்ள ‘இம்மார்ட்டல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘கிங்ஸ்டன்’ படத்துக்கு பிறகு, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள புதிய படம் ‘இம்மார்ட்டல்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கி இருக்கிறார். அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக அருண் ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் காதல் காட்சிகளாக சற்றே தூக்கலாக தொடங்கும் டீசர் இறுதியில் அமானுஷ்ய காட்சிகளுடன் முடிகிறது. ஏலியனா அல்லது வேறு ஏதேனும் ஜந்துவா என்பது குறித்த விளக்கம் எதுவும் டீசரில் அளிக்கப்படவில்லை. சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியிலான இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் தூண்டுகிறது. இப்படத்தை வரும் 2026இல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து,...

ஈரானுக்கு கடிதம் அனுப்பிய அமெரிக்க துணை ஜனாதிபதி

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸிடமிருந்து தெஹ்ரான் ஒரு கடிதத்தைப் பெற்றுள்ளது,...

ஹோர்முஸ் நீரிணையில் 3 எண்ணெய் கப்பல்கள் எரிகின்றன: ஈரான் புரட்சிகர காவல்படை

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் செல்லும்போது கண்ணிவெடிகளில் மோதியதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்