இரணைமடுவின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு

Date:

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் அனைத்து வான் கதவுகளும் இன்று(28 ) காலை முதல் திறந்துவிடப்பட்டுள்ளன. குளத்தின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக அனைத்து வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது.

இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளான முல்லைத்தீவு, வவுனியா வடக்கு பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி காரணமாக குளத்துக்கான நீர் வரவு அதிகமாக காணப்படுகிறது. இன்றைய நிலவரப்படி குளத்திற்க வருகின்ற நீரின் அளவு மணித்தியாலயத்திற்கு 6.503 எம்சிஎம் அளவாக காணப்படுகிறது.

இதேவேளை மணித்தியாயலத்திற்கு 0.73 எம்சிஎம் நீர் வெளியேறுகிறது. இன்று(28) மாலை நான்கு மணிக்கு இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் 34 அடியாக காணப்பட்டது. குளத்தின் முழுமையான நீர் மட்டம் உயரம் 36 அடியாகும்

இதேவேளை கிளிநொச்சி கிழக்கு பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குட்பட்ட கனககாம்பிகைகுளம், கல்மடுகுளம், பிரமந்தனாறு குளம் என்பனவும் வான் பாய்கின்றன்.

எனவே குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளமையால் குளத்தின் கீழ் பகுதிகளிலும், வான் பாயும் நீர் வெளியேறுகின்ற தாழ் நிலப்பகுதிகளை அண்டிய பிரதேசங்களிலும் வாழ்கின்ற பொது மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்