மலையக பகுதிகளில் எந்த நேரத்திலும் மண்சரிவு நிகழலாம்

Date:

தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக எந்த நேரத்திலும் மலையகப் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

இது வாழ்நாளில் எதிர்கொள்ளும் ஒரு பாரிய அசாதாரணமான நிலைமை என்று கூறினார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையகப் பிரதேசங்களில் 24 மணித்தியாலங்களில் 150 மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி நிலவினால் அந்த இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஆனால் கடந்த 24 மணித்தியாலங்களில் 500 மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி மலையகப் பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, மலையகப் பகுதிகளில் எந்த நேரத்திலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மண் மேடுகள் உள்ள இடங்களில் இருந்து உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய நிலைமையின்படி, அதிகாரிகளால் செய்யக்கூடியவை வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், அனர்த்தப் பகுதிகளுக்குச் செல்வது கூட அவர்களுக்குக் கடினமாக இருப்பதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்