5 பேரை கடித்த பூனை இறந்த நிலையில் கண்டெடுப்பு

Date:

வீடொன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள 5 பேரை கடித்த நிலையில் இறந்த சம்பவம் ஒன்று கல்முனை பகுதியில் பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நகர மண்டப வீதியில் இச்சம்பவம் அண்மையில் இடம் பெற்றுள்ளது.

குறித்த பூனை 5பேரை கடித்த பின்னர் தலைமறைவாகி இருந்துள்ளதுடன் நீண்ட தேடுதலின் பின்னர் இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவ்வதிகாரிகள் குறித்த பூனையை மீட்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
-பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரருடன் நடிகைக்கு தொடர்பா?: தீவிர விசாரணை!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி...

மோகினியில் கவிழ்ந்த கிளி, வவுனியா வாசிகள்!

விடுமுறை அல்லாத காலத்தில் சிவனொளிபாதமலையில் தரிசனம் செய்ய வந்திருந்த ஒரு குழுவினரை...

நீண்டகாலத்தின் பின் ஒரே நிகழ்வில் கலந்து கொண்ட திலீப்- மஞ்சு வாரியார்

திலீப் மற்றும் மஞ்சு வாரியர் மலையாளிகளின் விருப்பமான நடிகர்கள். ஒரு காலத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்