பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

Date:

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாகும். இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இவ்வழக்கு விசாரணையின் போது, எதிரி தரப்பில் அவரது 81 வயது முதுமையைக் கருத்தில் கொண்டு கருணை காட்டுமாறு விண்ணப்பிக்கப்பட்டது.

எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் இயற்கை பாதுகாவலர்களில் ஒருவரான பாட்டனாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள் மற்றும் கல்வி தடைப்பட்டிருந்தமை ஆகியவற்றை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரியின் வயதைப் புறக்கணித்து 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரருடன் நடிகைக்கு தொடர்பா?: தீவிர விசாரணை!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி...

மோகினியில் கவிழ்ந்த கிளி, வவுனியா வாசிகள்!

விடுமுறை அல்லாத காலத்தில் சிவனொளிபாதமலையில் தரிசனம் செய்ய வந்திருந்த ஒரு குழுவினரை...

நீண்டகாலத்தின் பின் ஒரே நிகழ்வில் கலந்து கொண்ட திலீப்- மஞ்சு வாரியார்

திலீப் மற்றும் மஞ்சு வாரியர் மலையாளிகளின் விருப்பமான நடிகர்கள். ஒரு காலத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்