சமத்துவக் கட்சியின் பேராளர் மாநாடு இன்று 05.11.2025 கிளிநொச்சி
கூட்டுறவாளர் மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு கட்சியின் தலைவர் சு.
மனோகரன் தலைமையில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் கட்சியின் பொதுச் சபை
உறுப்பினர்கள் இப் பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டனர். இதன் போது
கட்சியின் யாப்பு திருத்தம், கட்சியின் நிதி நடவடிக்கைகள், கட்சியின்
செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பது, மற்றும் தேர்தல்களை எதிர்கொள்வது
உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டன.
இப் பேராளர் மாநாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக்
கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார்,கட்சியின் நிர்வாக மட்டத்
தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





