பெண் ஒருவர் பிரிந்து சென்றது தொடர்பில் கசிந்த உரையாடலில் செல்வம் அடைக்கலநாதனின் குரலும் பதிவாகியுள்ளதாக கூறப்படுவதை தொடர்ந்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை பதவியில் அவர் தொடர்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு கூட்டத்தில், செல்வம் அடைக்கலநாதன் கட்சி தலைமை பதவியிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தவுள்ளதாக அந்த கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர்கள் பலர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.
ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பேசுவதாக குறிப்பிட்டு, கடந்த சில நாட்களாக பல குரல் பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த குரல் பதிவில், 15 வருடங்களாக தன்னுடன் இருந்த இளம் பெண்ணொருவர் தற்போது தனக்கு டிமிக்கி விட்டு, சென்றுவிட்டதாகவும், அது தொடர்பில் ஏதாவது தெரியுமா என்றும் இன்னொருவரிடம் கேட்பதும் பதிவாகியுள்ளது.
காதலி பிரிந்து சென்ற விரக்தியில் பேசுவது செல்வம் அடைக்கலநாதன் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அந்த குரல் பதிவு வெளியானதையடுத்து, ரெலோவிற்குள் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சி தலைமை பதவியிலிருந்து செல்வம் அடைக்கலநாதன் விலக வேண்டுமென பல தரப்பினரும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து, எதிர்வரும் 9ஆம் திகதி கட்சியின் தலைமைக்குழு கூட்டம் கூட்டப்படவுள்ளது. இதன்போது, கட்சித்தலைமை பதவியிலிருந்து செல்வம் அடைக்கலநாதன் விலக வேண்டுமென வலியுறுத்தவுள்ளதாக ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர்கள் பலர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தனர்.
கட்சியின் முக்கியஸ்தர்களில் பெரும்பாலானவர்கள், செல்வம் அடைக்கலநாதன் தார்மீக பொறுபபேற்று, கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்த ஆரம்பித்துள்ளதால், செல்வம் அடைக்கலநாதனின் லைமை பதவிக்கு நெருக்கடி தோன்றியுள்ளது.




