கர்நாடகாவில் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக தின​மும் இன்ஜின் ஓயில் குடித்து உயிர் வாழும் ‘ஓயில் குமார்’

Date:

கர்​நாட​கா​வில் ஓயில் குமார் என்​பவர் தின​மும் ஏழெட்டு லிட்​டர் இன்​ஜின் ஆயில் குடித்து உயிர் வாழ்ந்து வரு​வது ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்தி உள்​ளது. உடலுக்கு தீங்​கான ஓயிலை குடித்து வரும் இவர் இது​வரை மருத்​து​வ​மனைக்கே சென்​ற​தில்லை என கூறு​வது வியப்​பின் உச்​சிக்கு அழைத்து செல்​கிறது.

அண்​மை​யில் சமூக வலை​தளங்​களில் ஓயில் குமார் குறித்த வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஐயப்ப சுவாமி பக்​தர் ஒரு​வர் வாக​னங்​களுக்கு பயன்​படுத்​தப்​படும் இன்​ஜின் ஓயிலை குடித்​துக்​கொண்டே பேசுகிறார். இந்த வீடியோவை கண்ட‌ லட்​சக்​கணக்​கான பார்​வை​யாளர்​கள் ஆச்​சரி​யத்​தோடு பகிர்ந்து வரு​கின்​றனர்.

அந்த‌ வீடியோ​வில் இடம்​பெற்​றுள்ள 45 வயது மதிக்​கத்​தக்க நபரின் பெயர் குமார். கர்​நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்​தவர். கடந்த 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக தின​மும் ஏழெட்டு லிட்​டர் இன்​ஜின் ஓயிலை குடிப்​ப​தால் மக்​களால் ‘ஓயில் குமார்’ என அழைக்​கப்​படு​கிறார். காலை, மதிய உணவை உண்​ணா​மல் மூன்று வேளை​யும் ஓயிலே குடித்து வரு​கிறார். ஆனாலும் இது​வரை உடல்​நிலை பாதிக்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டதே இல்​லை.

வருடந்​தோறும் சபரி மலை ஐயப்​பன் கோயிலுக்கு பாத யாத்​திரை​யாக செல்​வ​தால் தனக்கு எந்த தீங்​கும் நேர​வில்லை என ஊடகங்​களுக்கு அவர் பேட்​டியளித்​துள்​ளார்.

மருத்துவர்கள் எச்சரிக்கை: இதுகுறித்து மருத்​துவ நிபுணர்​கள் கூறும்​போது, ‘‘பயன்​படுத்​தப்​பட்ட இன்​ஜின் ஓயில் உடலுக்கு தீங்கு விளைவிக்​கக்​கூடியது. அதி​லுள்ள பாலிசைக்​ளிக் ஹைட்ரோ கார்​பன் புற்​று​நோயை உரு​வாக்​கும். ஓயி​லில் கலக்​கப்​பட்​டுள்ள‌ இரும்​பு, அலுமினி​யம், தாமிரம், ஈயம் போன்ற தனிமங்​கள் நுரை​யீரல், கல்​லீரல், சிறுநீரகம், நரம்பு மண்​டலம் ஆகியற்றை கடுமை​யாக பாதிக்​கும். இதை குடித்​தாலோ, தொடர்ந்து சுவாசித்​தாலோ சுவாச மண்டல பாதிப்​பும் வயிற்று போக்​கும் ஏற்​படும்’’ என தெரிவிக்​கின்​றனர். ஆனால் ஓயில் குமார் எந்த பா​திப்​பும் இல்​லாமல்​ இன்​ஜின்​ ஓயில்​ குடித்​த​வாறே ​பாத ​யாத்​திரை மேற்​கொள்​வது வியப்​பை ஏற்​படுத்​துகிறது.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்