ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம்

Date:

துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 17 தினங்கள் நடைபெற உள்ளன.

வருடாந்த மஹோற்சவம் வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் பிரதம குருக்கள் ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள் தலைமையில் ஆரம்பமானது.

எதிர்வரும் முதலாம் திகதி புதன்கிழமை பாம்பு திருவிழாவும், இரண்டாம் திகதி வியாழக்கிழமை கம்சன்போர் திருவிழாவும், மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை வேட்டைத் திருவிழாவும், நான்காம் திகதி சனிக்கிழமை சப்பறத் திருவிழாவும்,  5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும், ஆறாம் திகதி திங்கட்கிழமை சமுத்திர தீர்த்த திருவிழாவும்,  ஏழாம் திகதி செவ்வாய்க்கிழமை கேணித் தீர்த்த திருவிழாவும் இடம் பெற்று மாலை கொடி இறக்கமும் இடம்பெறும்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்