சுன்னாகத்தில் திருடியவர் ஊர்காவற்றுறையில் கைது!

Date:

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைதுசெய்யடுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (14) முற்பகல் ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் இடம்பெற்றது.

இது தொடர்பில் தெரியவருகையில் –

வழமைபோன்று பகல் வீதி கண்காணிப்பு நடவக்கைகளுக்காக கொஸ்தாபசு ஹரிதாஸ் தலைமையிலான ஊர்காவற்றுறை பொலிஸ் அணியினர் நாரந்தனை பகுதியில் ஈடுபட்டிருந்த போது வீதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒருவர் நடமாடியதை அவதானித்த அவரை மறித்து சோதித்த போது அவரது காற்சட்டை பொக்கற்றில் தாலிக்கொடி, சங்கிலி, மோதிரங்கள், பென்ரன்கள், இருந்ததை அவதானித்துள்ளனர்.

இதையடுத்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது அவை சுன்னாகம் பகுதியில் களவாடப்பட்ட பெறுமதிமிக்க நகைகள் என தெரியவந்தது.

இதையடுத்து குறித்த சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று சோதனைகளை மேற்கொண்டபோது அங்கு பல நவீன கைத்தொலைபேசிகள், ஒருதொகைப் பணம் இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார், சுன்னாகம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த சந்தேக நபரையும் மீட்கப்பட்ட பொறுமதிமிக்க பொருட்களையும் சுன்னாகம் பொலிசாரிடம் ஊர்காவற்றுறை பொலிசார் கையளித்ததை அடுத்து, சுன்னாகம் பொலிசார் தமது பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த நகைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து திருட்டுக் சம்பவங்களுடன் தொடர்புடைய விசாரணைகளில் பொலிசார் தீவிரம் காட்டியுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்