யாழில் சடலமாக மிதந்த பெண் அடையாளம் காணப்பட்டார்: பின்னணி என்ன?

Date:

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து இன்று மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வந்த மீனவர்கள் கடலில் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேவேளை, இன்று மாலை அச்சுவேலி, தோப்பூரை சேர்ந்த பெற்றோர், அச்சுவேலி பொலிஸ் நிலையம் சென்று, தமது மகள் வீடு திரும்பவில்லையென முறையிட்டனர். செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு சென்ற மகள் திரும்பவில்லையென்றனர்.

இராசசிங்கம் சுபாசினி (40) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் சிறியளவு மனவளர்ச்சி குன்றியவர் என்றும் தெரிய வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்