ரூ.400 கோடி வசூலித்த அறிமுக ஹீரோவின் ‘சையாரா’!

Date:

இந்தி திரைப்பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள காதல் திரைப்படம், ‘சையாரா’. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இதில் அஹான் பாண்டே ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இவர் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் சகோதரர் மகன். அனீத் பட்டா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் ஜூலை 18ஆம் திகதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் வாரத்தில் இந்தியாவில் ரூ.177 கோடி வசூலித்த இந்தப் படம், 12 நாட்களில் ரூ.266 கோடி வசூலித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் ரூ. 300 கோடி வசூலைத் தாண்டும் என்கிறார்கள். உலகம் முழுவதும் இந்தப் படம் இதுவரை ரூ.404 கோடியை வசூலித்துள்ளது.

இந்த வருடம் வெளியான பாலிவுட் படங்களில் விக்கி கவுஷல் நடித்த ‘ஜாவா’ ரூ.601 கோடியை இந்தியாவில் வசூலித்தது. இதற்கடுத்தப் படியாக ‘சையரா’ படம் அதிகம் வசூலித்து வருகிறது. அறிமுக ஹீரோ ஒருவரின் படம் இப்படி வசூல் குவித்து வருவது, பாலிவுட் தயாரிப்பாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையில் 3 எண்ணெய் கப்பல்கள் எரிகின்றன: ஈரான் புரட்சிகர காவல்படை

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் செல்லும்போது கண்ணிவெடிகளில் மோதியதில்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ் வாசி பிணையில் விடுதலை!

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து...

ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்