கல்முனை பிரதேச செயலக வழக்கு அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு!

Date:

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் இடையீட்டு மனுதர்களான (பிரதிவாதிகள்) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரும் அவர்கள் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும் ஆஜரானதுடன் வழக்காளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகினர்.

இதன்போது இருதரப்பு சட்டத்தரணிகள் குழுவும் தமது வாதப்பிரதிவாதங்களை முன்வைத்திருந்தனர். இருந்தபோதிலும் மேலதிக வாதங்களையும், சமர்ப்பிப்பு களையும் முன்வைக்க அடுத்த வருடம் ஜனவரி மாதம் 28ம் திகதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்