பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘கோர்ட்’ தமிழ் ரீமேக்?

Date:

‘கோர்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் 14-ம் தேதி நானி தயாரிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையினைக் கைப்பற்றினார் தியாகராஜன். இதன் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘கோர்ட்’ படத்தில் வரும் காதலர்கள் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் கிருத்திக், தேவயானியின் மகள் இனியா இருவரும் நடிக்கவுள்ளார்கள். பிரியதர்ஷி கதாபாத்திரத்தில் பிரசாந்த், சாய்குமார் கதாபாத்திரத்தில் தியாகராஜன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை தியாகராஜனும், கதிரேசனும் இணைந்து தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் வெளியான படம் ‘கோர்ட் – எ ஸ்டேட் Vs எ நோபடி’. இதில் ப்ரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நானி தயாரிப்பில் வெளியான இப்படம் விநியோகஸ்தர்கள் அனைவருக்குமே பல மடங்கு லாபம் ஈட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்