நல்லூர் கந்தன் கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது!

Date:

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து சிறிய தேர் ஒன்றில் கொடிச்சீலை பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்து. கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நல்லூர் ஆலய மகோற்சவ கொடியேற்றம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெறும்.

மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும் , 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட்19ஆம் திகதியும் , 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும் , மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெற்று , மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்